உலகக் கோப்பையில் முதல் வெற்றியைப் பதிவு செய்தது எகிப்து

top-news

வான்கூவர், ஜூன் 22 –

நட்சத்திர வீரர் முகமது சாலாவின் அபார ஆட்டத்தால் எகிப்து அணி உலகக் கோப்பை வரலாற்றில் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்து புதிய சாதனை படைத்துள்ளது.

கனடாவின் வான்கூவரில் நடைபெற்ற ‘குரூப் ஜி’ பிரிவு ஆட்டத்தில், முதல் பாதியில் பின்தங்கியிருந்த எகிப்து அணி இரண்டாவது பாதியில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி நியூசிலாந்தை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.

முதல் பாதி முடிவில் நியூசிலாந்து முன்னிலையில் இருந்தது. ஆனால் இடைவேளைக்குப் பிறகு எகிப்து வீரர்கள் ஆட்டத்தின் வேகத்தை அதிகரித்தனர். குறிப்பாக 34 வயதான முகமது சாலா தனது அனுபவத்தையும் திறமையையும் வெளிப்படுத்தி அணியின் தாக்குதல் ஆட்டத்திற்கு உயிரூட்டினார்.

சாலாவின் ஊக்கத்துடன் விளையாடிய எகிப்து, தொடர்ந்து மூன்று கோல்களை அடித்து வெற்றியை கைப்பற்றியது. இந்த வெற்றி உலகக் கோப்பை வரலாற்றில் எகிப்தின் முதல் வெற்றியாக பதிவாகியுள்ளது.


https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *