அரசாங்கம் பழிவாங்குகிறது! என் பிள்ளைகள் பாவம்! - Dr. Mahathir

top-news
FREE WEBSITE AD

என்னைப் பழிவாங்குவதாக நினைத்து என் பிள்ளைகளை அரசாங்கம் தொல்லை செய்வதாக முன்னாள் பிரதமர்  Dr. Mahathir குற்றம்சாட்டினார். பில்லியன் கணக்கிலான அரசாங்க நிதிகளைக் கொள்ளையடித்ததாக என் மீது அவதூறுகளைப் பரப்பிய மடானி அரசு இப்போது வரையிலும் எந்தவோர் ஆதாரத்தையும் வழங்காமல் மெளனம் காப்பதாகவும், நான் அவர்களின் சூழ்ச்சியில் சிக்கவில்லை என்பதற்காக, என் குடும்பத்தை நேரடியாகவும் மறைமுகமாகவும் பழிவாங்குவதற்குப் பெயர் தான், மடானி அரசு என முன்னாள் பிரதமர் Dr. Mahathir சாடினார்.

இது நேர்மையான அரசாங்கமாக இருந்தால் நேரடியாக மோதலாம். ஆனால், அரசு இலாகாகளின் மூலம் சிக்கல்களை ஏற்படுத்தி, பழிவாங்கும் காரியங்களைச் செய்தால் மனதளவில் சோர்வை ஏற்படுத்தி, நம் வாழ்க்கையை அது முடக்கிவிடும் அபாயம் உள்ளதாக Dr. Mahathir தெரிவித்தார். தற்போது என் இரு மகன்களின் நிலையும் அப்படியான வருத்தமான நிலையில் இருப்பதாகவும் அவர்கள் என்ன பாவம் செய்தார்கள் என Dr. Mahathir ஒற்றுமை அரசாங்கத்தை நோக்கி கேள்வி எழுப்பினார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *