பாம்புடன் இருப்பதும் D.A.P உடன் இருப்பதும் ஒன்று தான்! – மகாதீர்!
- Thina S
- 25 Sep, 2024
ஒற்றுமை கூட்டணியில்
பக்காத்தான் பாரிசான் கட்சிகள் இணைந்து அரசாங்கத்தை நடத்தினாலும், அங்கே
அதிகாரம் என்பது டி.ஏ.பி கட்சியிடம் தான் அதிகம் இருப்பதாக முன்னாள் பிரதமர் மகாதீர்
தெரிவித்துள்ளார். அன்வார் டி.ஏ.பி கட்சி சொல்வதை மறுக்க முடியாது. டி.ஏ.பி
சொல்லும் 10 கருத்துகளில் 8 கருத்துகளை அவர் நிறைவேற்றி தான் ஆக வேண்டும் எனும் சூழலில்
அன்வார் இருக்கும் நிலையில் டி.ஏ.பியில் மலாய்க்காரர்களின் நிலை பரிதாபமாக இருப்பதை
உணர்ந்த நாம், எதிர்காலத்தில் மலேசியாவிலும் மலாய்க்காரர்கள் பரிதாபநிலைக்குத்
தள்ளப்படுவார்கள். 2019 இல் நான் டி.ஏ,பி
கட்சியுடன் இருந்தது பாம்புகளுடன் இருந்த மாதிரி தான் இருந்தது என முன்னாள் பிரதமர்
மகாதீர் தெரிவித்தார்
D.A.P கட்சி சொல்வதை அன்வாரால் நிராகரிக்க முடியாது. D.A.P கட்சியிடம்
40 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். அன்வாரின் சொந்த கட்சியான PKR’யில்
31 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். பாரிசானிடம் 30 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். இதில்
எண்ணிக்கையின் அடிப்படையில் ஒற்றுமை கூட்டணியில் உள்ள கட்சிகளிலேயே அதிகமான நாடாளுமன்றங்களைக்
கொண்டிருக்கும் கட்சியாக D.A.P
விளங்குகிறது. இதனாலேயே அன்வார் D.A.P கட்சியின்
கட்டுப்பாட்டில் இயங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார் என மகாதீர் தெரிவித்தார்
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *