டாக்டர் மகாதீரின் உடல்நிலை குறித்து வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் தகவல் தாக்கல்

top-news

ஷா ஆலாம், ஜூலை 29-

 முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது தாக்கல் செய்துள்ள RM150 மில்லியன் அவதூறு வழக்கின் விசாரணையைத் தொடர அவரது உடல்நிலை மற்றும் உடற்தகுதி தொடர்பான சமீபத்திய தகவல் வரும் வெள்ளிக்கிழமை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்படவுள்ளதாக டாக்டர் மகாதீரின் வழக்கறிஞர் முகம்மது ரஃபிக் ரஷித் அலி கூறினார்.

நீதித்துறை ஆணையர் டத்தோ டொனால்ட் ஜோசப் ஃபிராங்க்ளின் முன்னிலையில் இணையவழி வழக்கு மேலாண்மை நடைபெறும் என்று அவர் மேலும் சொன்னார்.

டாக்டர் மகாதீர் தற்போது தேசிய இருதயக் கழகத்தின் (IJN) மருத்துவக் கண்காணிப்பில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு சிகிச்சையளித்து வரும் மருத்துவ நிபுணர்கள், வெள்ளிக்கிழமை அவரது உடல்நிலை, உடற்தகுதி மற்றும் நீதிமன்ற விசாரணையில் பங்கேற்கும் தயார்நிலை குறித்து புதுப்பிக்கப்பட்ட மருத்துவ அறிக்கையை வழங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், டாக்டர் மகாதீரின் வயது மற்றும் தற்போதைய மருத்துவ நிலையைக் கருத்தில் கொண்டு, விசாரணையை மீண்டும் தொடங்குவது எளிதான விடயமல்ல என்றும் வழக்கறிஞர் தெரிவித்தார்.

முன்னதாக, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமுக்கு எதிராக டாக்டர் மகாதீர் RM150 மில்லியன் இழப்பீடு கோரி அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *