நச்சு உணவால் 101 பள்ளி மாணவர்கள் பாதிப்பு! - ஈப்போ
- Thina S
- 26 Sep, 2024
ஈப்போவில் உள்ள Chepor தேசிய பள்ளியில் மாணவர்களுக்குப் பரிமாறப்பட்ட உணவில் நச்சுத் தன்மை இருந்ததால் 101 பள்ளி மாணவர்கள் பாதிப்பிற்குள்ளாகியதைப் பேராக் மாநிலச் சுகாதாரத் துறை இயக்குநர் Dr.Feisul Idzwan உறுதிப்படுத்தினார். கடந்த 24 செப்டம்பர் பள்ளியின் சுற்றுண்டிச் சாலையில் உள்ள சாக்லெட் நீரை அருந்தியதால் 101 மாணவர்கள் வயிற்றுப் போக்கு தலைசுற்றல் வாந்தி என பாதிக்கப்பட்டதாக முதற்கட்ட ஆய்வில் தெரியவந்ததாக அவர் தெரிவித்தார்.
தொடர்ச்சியாக ஆய்வுகளை மேற்கொள்ள அக்தோபர் 8 வரையில் 14 நாள்கள் சம்மந்தப்பட்ட பள்ளியை மூடுவதாகவும் இது தொடர்பான உணவு பராமரிப்பாளர்களை விசாரித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். பாதிக்கப்பட்ட 101 மாணவர்களும் பைனூன் அரசு மருத்துவமனைகளிலும் தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்றதாகவும் அவர்களில் 62 மாணவர்கள் சிகிச்சைகளைத் தொடர்வதாக அவர் உறுதிப்படுத்தினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *