ஹரிமாவ் மலாயா அணி பங்களாதேஷை 7-1 என வீழ்த்தியது

top-news

குவாந்தான், செப். 24-

செய்தி- வெற்றி மைந்தன்

மலேசியாவின் ஹரிமாவ் மலாயா புட்சால் அணி, 2026 ஆசிய கோப்பை புட்சால் தகுதிச் சுற்றின் இரண்டாவது போட்டியில் பங்களாதேஷை 7-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி, எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்தது.

ரக்போல் சைநெட்ங்காம் பயிற்சியாளராக உள்ள இந்த அணியின் கோல்கள், அவாலுதீன் மாட் நவி (7-ஆவது நிமிடம்), டானியல் டைன் (16-ஆவது நிமிடம்), மஹாதிர் ஹரஹாப் கைருடின் (18, 28-ஆவது நிமிடங்கள்), சையர் இக்பால் கான் (23-ஆவது நிமிடம்), சாட் சனி (36-ஆவது நிமிடம்) , பாரிஸ் ஜோஹான் (36-ஆவது நிமிடம்) ஆகியோரால் அடிக்கப்பட்டன. பங்களாதேஷின் ஒரே ஆறுதல் கோல், 8-வது நிமிடத்தில் பயேத் அசிமால் அடிக்கப்பட்டது.

தேசிய அணியின் வீரர்களின் ஆற்றல் மிக்க ஆட்டம், முதல் பாதியின் ஆரம்பத்தில் சிறு தடுமாற்றம் இருந்தபோதிலும், ரசிகர்கள் முன்னிலையில் இந்த பெரிய வெற்றியைப் பதிவு செய்ய முக்கிய காரணமாக அமைந்தது. அணியின் ஒருங்கிணைப்பு, தாக்குதல் உத்தி, பங்களாதேஷின் பாதுகாப்பை முறியடித்து, ஆதிக்கம் செலுத்தியது.

இந்த வெற்றி, ஹரிமாவ் மலேயாவின் ஆசிய கோப்பை புட்சால் தகுதிச் சுற்றில் வலுவான நிலையை உறுதிப்படுத்துகிறது. அணியின் திறமையான ஆட்டம், மலேசிய புட்சால் அணியின் தரத்தை உலக அளவில் காட்டியது. இந்த வெற்றி, அடுத்த போட்டிகளுக்கு அணிக்கு மேலும் உற்சாகத்தை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *