துவாஸ் சோதனைச் சாவடியில் 3.19 மில்லியன் போதைப்பொருள் பறிமுதல் – மலேசியர் கைது

top-news

கோலாலம்பூர், செப். 28-

போதைப்பொருள் கடத்த முயன்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், 37 வயதான மலேசியர் ஒருவர் செப்டம்பர் 23 அன்று சிங்கப்பூரின் துவாஸ் சோதனைச் சாவடியில் கைது செய்யப்பட்டார். அதே நாளில் நடந்த ஒரு தனி நடவடிக்கையில், போதைப்பொருள் குற்றங்கள் செய்ததாகச் சந்தேகிக்கப்படும் சிங்கப்பூர் பிரஜை ஒருவர் தடுத்து வைக்கப்பட்டார். கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் மொத்த மதிப்பு S$1 மில்லியனுக்கும் (RM3.19 மில்லியன்) அதிகமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

மலேசியாவில் பதிவு செய்யப்பட்ட அவரது மோட்டார் சைக்கிளின் பின்புறப் பெட்டியில், பிஸ்கட்கள் என முத்திரையிடப்பட்டு, போதைப்பொருள் இருப்பதாகச் சந்தேகிக்கப்பட்ட சீல் வைக்கப்பட்ட பொட்டலங்களை அதிகாரிகள் கண்டெடுத்ததை அடுத்து, அந்த மலேசியர் கைது செய்யப்பட்டதாக குடிநுழைவு மற்றும் சோதனைச் சாவடிகள் மையம் (ICA) தெரிவித்துள்ளது.

மோட்டார் சைக்கிளிலிருந்து சுமார் 6.96 கிலோ ஹெராயின், 1.1 கிலோ மெத்தாம்பெத்தமைன் மற்றும் 1.03 கிலோ கஞ்சா ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன என்று அந்த ஆணையம் கூறியதாக பெர்னாமா இன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மரண தண்டனைக்கு வழிவகுக்கும் 1973 ஆம் ஆண்டு போதைப்பொருள் தவறாகப் பயன்படுத்துதல் சட்டத்தின் 5 மற்றும் 7 பிரிவுகளின் கீழ் மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருவதாக ICA தெரிவித்துள்ளது!

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *