இரசாயனக் கழிவுத் தொட்டியில் விழுந்து ஆடவர் மரணம்
- Surendran Sumdraraj
- 17 Aug, 2026
கோலாலம்பூர், ஆக 17-
ஜொகூர், பாசிர் கூடாங்கில் உள்ள ஒரு தொழிற்பேட்டையில், 20 அடி உயரமுள்ள இரசாயனக் கழிவுத் தொட்டியில் நேற்று இரவு விழுந்ததில் 26 வயது தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார்.
நேற்று இரவு 9.51 மணிக்கு அந்த நபர் உலோக ஹைட்ராக்சைடு கசடு தொட்டியில் விழுந்ததாக பாசிர் கூடாங் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் செயல்பாட்டுக் கட்டளை அதிகாரி ஃபிர்தாஸ் அஹ்மத், கூறியதாககோஸ்மோ செய்தி வெளியிட்டுள்ளது.
அவசர அழைப்பு விடுக்கப்பட்ட நான்கு நிமிடங்களிலேயே சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள், சுமார் 1.5 மீட்டர் ஆழத்தில் தொட்டியில் இருந்த பாதிக்கப்பட்டவரைக் கண்டனர். உடலை மீட்க அவர்களுக்கு சிறப்பு உபகரணங்கள் தேவைப்பட்டன.
சம்பவ இடத்திலேயே மருத்துவ அதிகாரி ஒருவர் பாதிக்கப்பட்டவரின் மரணத்தை உறுதி செய்தார். சடலம் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது, அவர்கள் இதுகுறித்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



