மூவாரில் வெள்ளப் பாதிப்பு தீவிரம்; 125 பேர் தற்காலிக நிவாரண மையங்களுக்கு மாற்றம்

top-news

மூவார், ஜூலை 27-

இங்குள்ள சுங்கை பாலாங் சட்டமன்றத் தொகுதியில் வெள்ள நிலைமை மேலும் மோசமடைந்ததைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை ஐந்து மடங்குக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. இதையடுத்து, மேலும் ஒரு தற்காலிக நிவாரண மையம் (PPS) திறக்கப்பட்டுள்ளது.

சமூக நலத் துறையின் (JKM) பேரிடர் தகவல் இணையதளத்தின் தகவலின்படி, நேற்று இரவு 11.30 மணி நிலவரப்படி, 33 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 125 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

அவர்களில், 25 குடும்பங்களைச் சேர்ந்த 84 பேர் பாரிட் புலாட் தேசியப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக நிவாரண மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும், எட்டு குடும்பங்களைச் சேர்ந்த 41 பேர் ஒராங் காயா அலி தேசியப் பள்ளியில் செயல்படும் மற்றொரு நிவாரண மையத்தில் தங்கியுள்ளனர்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களில் மூன்று குழந்தைகளும் இடம்பெற்றுள்ளனர். அவர்கள் இரு நிவாரண மையங்களிலும் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *