மு.க.ஸ்டாலின் சட்டசபைக்கு வரும்போது இங்கு பலர் இருக்க மாட்டார்கள்: சாத்தூர் ராமச்சந்திரன்

top-news
FREE WEBSITE AD

சென்னை, ஆக. 17-

தமிழக சட்டசபையில் நடைபெற்ற மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது, திமுக முன்னாள் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் ஆளும் கட்சியினருக்குச் சவால் விடுக்கும் வகையில் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.

திமுகவின் கொள்கைப் பிடிப்பு மற்றும் மக்கள் நலனுக்காக மேற்கொண்ட போராட்டங்களைச் சுட்டிக்காட்டிய அவர், கடந்த காலங்களில் கட்சியைச் சேர்ந்த பலர் போராட்டங்களில் பங்கேற்று சிறை சென்றுள்ளதாகத் தெரிவித்தார்.

மேலும், திமுக ஆட்சியில் கடந்த 5 ஆண்டுகளில் 27 லட்சம் பேருக்கு அரசு மனைப் பட்டா வழங்கப்பட்டதாகவும், சென்னை உள்ளிட்ட மாநகராட்சிகளில் நீண்ட காலமாக குடியிருந்த 77 ஆயிரம் பேருக்கு பட்டா வழங்கப்பட்டதாகவும் கூறினார்.

கொரோனா காலத்தில் மக்களுக்கு ரூ.4,000 நிவாரணம் வழங்கியதாகவும் அவர் குறிப்பிட்டார். அதேவேளை, தற்போதைய தவெக அரசு அளித்த தேர்தல் வாக்குறுதிகளில் பலவற்றை நிறைவேற்றவில்லை என்றும் விமர்சித்தார்.

தொடர்ந்து பேசிய சாத்தூர் ராமச்சந்திரன், “மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி மீண்டும் வரும். அவர் சட்டசபைக்கு வரும் நேரத்தில் நீங்கள் பலர் இங்கு இருக்க மாட்டீர்கள்; நாங்கள் இருப்போம்” என்று கூறினார்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *