கடல் வழியாக மலேசியாவுக்குள் நுழைந்த 57 வெளிநாட்டினர் கைது!

top-news

அக்தோபர் 21,

சட்டவிரோதமாக மலேசியாவுக்குள் நுழைய முயற்சி செய்த 57 வெளிநாட்டினர்களைக் கடல்சார் பாதுகாப்பு ஆணையம் மலேசியக் கடல் எல்லையில் கைது செய்தது. சிலாங்கூர் தஞ்சோங் காராங் கடல்வழியாக அதிகாலை 2 மணிக்குச் சந்தேகத்திற்குரிய படகு மலேசிய எல்லைக்குள் நுழைந்ததாகச் சிலாங்கூர் மாநிலக் கடல்சார் பாதுகாப்பு ஆணைய இயக்குந்நர் Abdul Muhaimin தெரிவித்தார். சம்மந்தப்பட்ட படகை முற்றுகையிட்டு படகிலிருந்த அனைவரையும் சோதனையிட்டதில் அவர்கள் சட்டவிரோதமாக மலேசியாவுக்குள் நுழைய முயற்சித்தது கண்டறியப்பட்டதாக Abdul Muhaimin தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட அனைவரும் இந்தோனேசியாவைச் சேர்ந்தவர்கள் என்றும் 18 முதல் 60 வயதுக்குற்பட்டவர்கள் என்றும் தெரிய வந்துள்ளது. கைது செய்யப்பட்ட 34 ஆண்களும் 23 பெண்களும் மேலதிக விசாரணைக்காகத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருப்பதாகவும் மரத்தினால் செய்யப்பட்ட படகைக் கொண்டு இந்தோனேசியாவிலிருந்து மலேசிய எல்லைக்குள் நுழைந்திருப்பதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. 

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *