MASZLEE MALIK மெந்திரி பெசாரா? ONN HAFIZ GHAZI-க்கு சவால்!

top-news

ஜூன் 24,

ஜொகூர் மாநிலத் தேர்தலில் முன்னாள் கல்வி அமைச்சர் Dr Maszlee Malik போட்டியிடுவார் என பரவலாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சர்ச்சைக்குரிய தொகுதியான Puteri Wangsa சட்டமன்றத்தில் அவர் போட்டியிடுவார் என பக்காத்தான் தலைவர் DATUK SERI ANWAR IBRAHIM அறிவித்ததை அடுத்து பக்காத்தானின் மெந்திரி பெசார் வேட்பாளராக Dr Maszlee Malik அறிவிக்கப்பட வேண்டும் என ஜொகூர் பி.கே.ஆர் இளைஞர் பிரிவினர் தெரிவித்துள்ளனர். 

முன்னதாக ஜொகூர் மாநிலத் தேர்தலுக்குப் பின்னரே பக்காத்தானின் மெந்திரி பெசார் யார் என்பதைப் பக்காத்தான் தலைமை முடிவு செய்யும் என ஜொகூர் மாநிலப் பி.கே.ஆர் தலைவர் DATUK SERI DR ZALIHA MUSTAFA தெரிவித்திருந்தார். முன்னாள் கல்வி அமைச்சராக இருந்த Dr Maszlee Malik, ஜொகூர் மாநிலப் பாரிசானின் மெந்திரி பெசார் வேட்பாளரான Datuk Onn Hafiz Ghazi தன்னுடன் நேரடி விவாதத்திற்கு வர வேண்டும் என தனது அதிகாரப்பூர்வச் சமூகவலைத்தலத்தின் மூலமாக அழைப்பு விடுத்துள்ளார். 

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *