மத, இன எதிர்ப்பால் பிரச்சனைகள் தீர்க்கப்படாது! – Mohamad Sabu
- Thina S
- 25 Sep, 2024
மலேசியாவில் பல்லின
மக்களின் ஒற்றுமையை நிலைநிறுத்தும் பொறுப்பு அனைவருக்கும் இருக்க வேண்டும் என AMANAH கட்சியின்
தலைவரும் உணவு வேளாண்மை பாதுகாப்பு அமைச்சின் அமைச்சர் Datuk Seri Mohamad Sabu வலியுறுத்தினார்.
தாங்கள் எதிர்நோக்கும்
பிரச்சனைகளுக்குக் குறிப்பிட்ட சமூகத்தினர்கள் மீது குற்றம்சாட்டுவதாலும் இன அடிப்படையில்
குற்றம் சுமத்துவதாலும் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண முடியாது என்பதை அரசியல் தலைவர்கள்
உட்பட அனைவரும் அறிந்து செயல்பட வேண்டும் என அவர் தெரிவித்தார்.
இந்தியர்கள், சீனர்கள், மலாய்க்காரர்கள்
என சமூகமாக அவர்கள் இருந்தாலும் நாம் அனைவரும் மலேசியர்கள் என்பதை முதன்மைப்படுத்த வேண்டும். மலேசியர்களாக
நாம் ஒன்றிணைந்து வாழ்வதை முகாந்தாரமாகக் கொண்டு நாம் செயல்படும் போது, வேற்றுமையும்
பிரிவினைவாதமும் இருக்காது என Datuk
Seri Mohamad Sabu தெரிவித்தார்
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *