டைமண்ட் லீக் தடகளப் போட்டியில் அசத்திய வீரர்கள்!

top-news

பெல்ஜியத்தின் பிரசல்ஸ் நகரில், டைமண்ட் லீக் தடகளப் போட்டியின் பைனல் நடக்கிறது. போல் வால்ட் போட்டியில் சுவீடனின் 24 வயதான அர்மாண்ட் டுப்ளான்டிஸ் களமிறங்கினார். சமீபத்திய பாரிஸ் ஒலிம்பிக்கில் தங்கம் வென்றார். சமீபத்தில் போலந்து டைமண்ட் லீக்கில் 6.26 மீ., உயரம் தாண்டி உலக சாதனை படைத்திருந்தார்.

இம்முறை 6.11 மீ., மட்டும் தாண்டி வெற்றி பெற்றார். இது டைமண்ட் லீக் பைனல் சாதனையாக அமைந்தது. இவர் கூறுகையில்,'' 6.11 மீ., உயரம் தாண்டியது சிறப்பு தான். உலக சாதனையுடன் ஒப்பிடும் போது இது ஒன்றுமல்ல என்றார்.

ஆஸ்திரேலிய வட்டு எறிதல் வீரர் பாரிஸ் ஒலிம்பிக் சாம்பியன் மாத்யூ டென்னி 69.96 மீ., துாரம் எறிந்து, 40 ஆண்டு டைமண்ட் லீக் சாதனையை முறியடித்தார். முன்னதாக 1984ல் செக்கோஸ்லோவாகியாவின் இம்ரிச் புகார், 69.94 மீ துாரம் எறிந்து இருந்தார்.

பெண்களுக்கான 100 மீ  ஓட்டத்தில் ஒலிம்பிக் சாம்பியன் செயின்ட் லுாசியாவின் ஜூலியன் ஆல்பிரட் டைமண்ட் லீக் பைனலில் முதன் முறையாக முதலிடம் பிடித்தார். அமெரிக்காவின் ஷா காரி  8வது இடம் பிடித்தார்.

ஆண்களுக்கான 100 மீ., ஓட்டத்தில் ஜமைக்காவின் அக்கீம் பிளேக் (9.93 வினாடி) முதலிடம் பிடிக்க, அமெரிக்காவின் கிறிஸ்டியன் கோல்மான் (10.00), பிரட் கெர்லே (10.01) அடுத்த இரு இடம் பெற்றனர்.

பெண்களுக்கான 400 மீ., ஓட்டத்தில் ஒலிம்பிக் உலக சாம்பியன் பவுலினோ (49.45 வினாடி, டொமினிகன் குடியரசு) தொடர்ந்து இரண்டாவது முறையாக டைமண்ட் லீக் பட்டம் வென்றார்.


https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *