கிலியன் எம்பாப்பே அதிரடி, ரியல் மாட்ரிட் ஒலிம்பியாகோஸை 4-3 என வீழ்த்தியது!

top-news

செய்தி- வெற்றி மைந்தன்

கிரீஸ், நவ. 27-

சாம்பியன்ஸ் லீக் போட்டியில் கிலியன் எம்பாப்பே ஒரே ஆட்டத்தில் நான்கு கோல்கள் அடித்து அசத்தி மாட்ரிட், ஒலிம்பியாகோஸை 4-3 என்ற கணக்கில் வீழ்த்த உதவினார்.

கிரீஸில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் அதிர்ச்சி கொடுத்தது ஒலிம்பியாகோஸ். சிக்கின்ஹோ 18 மீட்டர் தூரத்தில் இருந்து அபாரமாக பந்தை வலைக்குள் செலுத்தி ரியல் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார். ஆனால் அதன் பிறகு மைதானம் முழுவதும் எம்பாப்பேதான் ஆடினார்!

உலக சாம்பியன் நான்கு கோல்கள் அடித்து ரியல் மாட்ரிட்டை வெற்றி பாதைக்கு இழுத்து வந்தார். இதன் மூலம் இந்த சீசன் சாம்பியன்ஸ் லீக்கில் அதிக கோல் அடித்த வீரர் என்ற பெருமையையும் அவர் தட்டிச் சென்றார்.

“மீண்டும் வெற்றி பெறுவது மிகவும் முக்கியம். மூன்று போட்டிகள் வெற்றி இல்லாமல் இருந்தது எங்களுக்கு ரியல் மாட்ரிட்டைப் பொறுத்தவரை மிக நீண்ட காலம். இப்போது அணி நல்ல நிலையில் உள்ளது. சில விஷயங்களை சரி செய்ய வேண்டியிருக்கிறது. ரியல் மாட்ரிட் போன்ற கிளப்பில் இப்படி பேச்சுகள் வருவது சகஜம்தான்” என்று போட்டிக்குப் பின்னர் எம்பாப்பே தெரிவித்தார்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *