தமிழ்நாட்டின் நலனுக்கே மேகதாது அணை: டி.கே. சிவக்குமார்

top-news
FREE WEBSITE AD

பெங்களூரு: மேகதாதுவில் புதிய அணை கட்டும் திட்டம் தமிழ்நாட்டின் நலனுக்கும், பெங்களூருவின் குடிநீர் தேவைக்கும் உதவும் என்று கர்நாடக முதலமைச்சர்  டி.கே. சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

பெங்களூருவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், மேகதாதுவில் சேமிக்கப்படும் தண்ணீரில் சுமார் 95 சதவீதம் தமிழ்நாட்டிற்கே பயன்படும் என கூறினார். இந்தத் திட்டம் தமிழ்நாட்டிற்குப் பாதிப்பை ஏற்படுத்தாது என்றும், மாறாக நன்மை தரும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

மேலும், மேகதாது அணை தொடர்பாக தமிழக முதலமைச்சர் விஜயிடம் ஏற்கனவே விளக்கம் அளித்துள்ளதாகவும் சிவக்குமார் தெரிவித்தார். காவிரி நீர் பகிர்வு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பை கர்நாடக அரசு முழுமையாக மதிக்கும் என்றும், அந்தத் தீர்ப்பின்படி தமிழ்நாட்டிற்கு உரிய காவிரி நீர் தொடர்ந்து வழங்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *