மேகதாது அணை விவகாரம்: மாநிலங்களவையில் காங்கிரஸ் நோட்டீஸ்
- Surendran Sumdraraj
- 29 Jul, 2026
புதுடெல்லி, ஜூலை 29-
மேகதாது அணை விவகாரம் தொடர்பாக மாநிலங்களவையில் அவசர விவாதம் நடத்தக் கோரி காங்கிரஸ் எம்.பி. பிரவீன் சக்கரவர்த்தி நோட்டீஸ் அளித்துள்ளார். கேள்வி நேரத்தை ஒத்திவைத்து, காவிரி நீர் பிரச்சினை மற்றும் மேகதாது அணை விவகாரம் குறித்து உடனடியாக விவாதிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
நோட்டீஸில், தமிழ்நாட்டிற்கு உடனடியாக 4 டி.எம்.சி. காவிரி நீரை திறந்துவிட வேண்டும் என்றும், மேகதாது அணை கட்ட தமிழ்நாட்டின் அனுமதி தேவையில்லை என்ற மத்திய அரசின் பதில் தவறான விளக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தமிழகத்தின் நீர் உரிமையை நேரடியாக பாதிக்கும் முக்கிய பிரச்சினை என்பதால், நாடாளுமன்றத்தில் விரிவான விவாதம் நடத்த வேண்டியது அவசியம் என அவர் தெரிவித்துள்ளார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



