அமைச்சரவையில் மாற்றமா? - ANWAR விளக்கம்!

top-news
FREE WEBSITE AD

அமைச்சரவையில் மாற்றம் ஏற்படும் என செய்திகள் வெளியான நிலையில் இன்று பிரதமர் அன்வார் விளக்கமளித்தார். இது புதிய செய்தி, அமைச்சரவையில் மாற்றம் குறித்து எந்த எண்ணமும் தமக்கில்லை என அன்வார் விளக்கமளித்தார். கடந்த டிசம்பரில் அமைச்சரவையின் முக்கிய பொறுப்புகளில் மாற்றங்கள் நிகழ்ந்த நிலையில் இவ்வாண்டு இறுதியிலும் அமைச்சரவை மாற்றம் செய்யப்படும் என்பதில உண்மை இல்லை என்றும், அரசியல் வியூகங்களைக் கணித்து செய்தி வெளியிடுவது போல, அரசாங்கச் செய்திகளை வெளியிட வேண்டாம், அரசாங்கச் செய்திகள் தொடர்பாக உடனுக்குடன் தெளிவுகள் பெற அரசு வலைத்தளங்கள் 24 மணி நேரச் சேவையையும் வழங்குவதை அவர் நினைவுருத்தினார்.

முன்னதாகப் பி.கே.ஆர் கட்சியைச் சேர்ந்த ஒரு முக்கிய அமைச்சர் வேறு அமைச்சுக்கு மாற்றப்படுவார் அல்லது அமைச்சரவையில் இருந்து நீக்கப்படுவார் என செய்திகள் பரவலாக வெளியானது.

அமைச்சரவை மறுசீரமைப்பு குறித்து பேசப்பட்டு வருவதாகவும், இரண்டு துணை அமைச்சர்களின் செயல்பாடுகள் சிறப்பாக இருப்பதால், அவர்களுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படுவதாகவும் செய்திகள் வெளியாகியது குறிப்பிடத்தக்கது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

https://Bandur-ART.Blogspot.com/2024/08/the-ultimate-guide-to-no-mans-sky-mods.html

I was recommendd thhis blog by my cousin. I am not sure whether this post is written by him as nobody else know such detailed about mmy trouble. You are incredible! Thanks! https://Bandur-ART.Blogspot.com/2024/08/the-ultimate-guide-to-no-mans-sky-mods.html