உலகக் கோப்பையில் அதிக கோல் உதவி; மெஸ்சி புதிய சாதனை

top-news
FREE WEBSITE AD

கன்சாஸ் சிட்டி, ஜூலை 13-

உலகக் கோப்பை காலிறுதி ஆட்டத்தில் அர்ஜெண்டினா அணி சுவிட்சர்லாந்தை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.

இந்த ஆட்டத்தில் கோல் அடிக்க முடியவில்லை என்றாலும், அர்ஜெண்டினா அணித் தலைவர் லயனல் மெஸ்சி புதிய வரலாறு படைத்தார்.

39 வயதான மெஸ்சி, ஆட்டத்தின் 10-ஆவது நிமிடத்தில் கிடைத்த கார்னர் கிக் வாய்ப்பில் அலெக்சிஸ் மேக் அலிஸ்டருக்குக் கோல் உதவி செய்தார்.

இதன் மூலம், உலகக் கோப்பை வரலாற்றில் தனது 10-ஆவது கோல் உதவியைப் பதிவு செய்த மெஸ்சி, இந்த தொடரில் அதிக கோல் உதவி செய்த வீரராகச் சாதனை படைத்தார்.

இதற்கு முன்பு மேற்கு ஜெர்மனி அணியின் முன்னாள் வீரர் பிரிட்ஸ் வால்டர் 9 கோல் உதவிகளுடன் சாதனைப் பட்டியலில் முன்னிலையில் இருந்தார்.

அவரை முந்திய மெஸ்சி, உலகக் கோப்பை வரலாற்றில் மேலும் ஒரு முக்கியமான சாதனையைத் தனது பெயரில் பதிவு செய்துள்ளார்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *