பெல்லிங்காம், கேன் அசத்தல்; மெக்சிகோவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது இங்கிலாந்து
- Surendran Sumdraraj
- 06 Jul, 2026
மெக்சிகோ சிட்டி, ஜூலை 6 –
2026 உலகக் கோப்பை கால்பந்து தொடரின் 16-ஆவது சுற்றில், இங்கிலாந்து அணி மெக்சிகோவை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது.
எஸ்டாடியோ அஸ்டெகா மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், ஜூட் பெல்லிங்காம் 36 மற்றும் 38-ஆவது நிமிடங்களில் அடுத்தடுத்து இரண்டு கோல்கள் அடித்து இங்கிலாந்துக்கு 2-0 என்ற வலுவான முன்னிலையைப் பெற்றுத் தந்தார்.
முதல் பாதி முடிவதற்கு மூன்று நிமிடங்களுக்கு முன்பு ஜூலியன் கினோனஸ் ஒரு கோல் அடித்து மெக்சிகோவின் கோல் கணக்கை 2-1 ஆகக் குறைத்தார்.
இரண்டாவது பாதியில், 60-ஆவது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை இங்கிலாந்து அணித்தலைவர் ஹாரி கேன் கோலாக மாற்றி அணியின் முன்னிலையை 3-1 ஆக உயர்த்தினார்.
அதன்பின் 69-ஆவது நிமிடத்தில் ரவுல் ஜிமெனஸ் பெனால்டி மூலம் மெக்சிகோவுக்காக இரண்டாவது கோலை அடித்தாலும், அதற்கு மேல் கோல் அடிக்க முடியவில்லை. இறுதியில் 3-2 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்து வெற்றி பெற்று காலிறுதிக்குள் நுழைந்தது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



