தென் கொரியாவை வீழ்த்தி நாக்-அவுட் சுற்றுக்கு மெக்சிகோ தகுதி

top-news

குவாடலஹாரா, ஜூன் 19 –

2026 உலகக் கோப்பை கால்பந்து தொடரில் நாக்-அவுட் சுற்றுக்குத் தகுதி பெற்ற முதல் அணியாக மெக்சிகோ உருவெடுத்துள்ளது.

குரூப் ‘ஏ’ பிரிவில் நடைபெற்ற ஆட்டத்தில் தென் கொரியாவை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய மெக்சிகோ, ஒரு ஆட்டம் மீதமிருக்கும்போதே அடுத்த சுற்று வாய்ப்பை உறுதி செய்ததுடன், குழு சாம்பியன் பட்டத்தையும் கைப்பற்றியது.

குவாடலஹாரா மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் முதல் பாதியில் கோல் அடிக்க முடியாமல் போராடின. எனினும், இடைவேளைக்குப் பிறகு தென் கொரிய கோல்கீப்பரின் தவறை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட லூயிஸ் ரோமோ, மெக்சிகோவுக்காக வெற்றிக் கோலை பதிவு செய்தார்.

அந்த ஒரே கோல் போட்டியின் திருப்புமுனையாக அமைந்தது. அதன் பின்னர் மெக்சிகோ தற்காப்பை பலப்படுத்தி தென் கொரியாவின் தாக்குதல்களை வெற்றிகரமாக முறியடித்தது.

முன்னதாக தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடக்க ஆட்டத்திலும் வெற்றி பெற்றிருந்த மெக்சிகோ, இந்த வெற்றியின் மூலம் முழு ஆறு புள்ளிகளைப் பெற்று குரூப் ‘ஏ’ பிரிவில் முதலிடத்தை உறுதி செய்துள்ளது.


https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *