நான் ஓய்வு பெறப் போகிறேனா? – அது பொய்யான செய்தி!
- Shan Siva
- 09 Nov, 2024
நான் ஓய்வு பெறப் போகிறேனா? – அது பொய்யான செய்தி!
ஜொகூர் பாரு, நவம்பர் 9: சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று பரவிய நிலையில்,
தான் ஓய்வு பெறப் போவதாகக் கூறப்படுவதை ஜோகூர்
காவல்துறைத் தலைவர் சடத்தோ எம் குமார் மறுத்துள்ளார்.
இந்த பொய்யான
செய்தி பரப்பப்படுவது குறித்து தீவிர கவலை தெரிவித்த அவர், உண்மைக்கு மாறான தகவல்களை பரப்புவோர் மீது சட்டப்படி உரிய
நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
டிக்டோக்கில்
வைரலான சம்பந்தப்பட்ட அந்த வீடியோ தவறானது மற்றும் ஆதாரமற்றது என்றும், குழப்பத்தை ஏற்படுத்தக்கூடிய சரிபார்க்கப்படாத
மற்றும் பொறுப்பற்ற தகவல்களைப் பரப்ப வேண்டாம் என்று ஜோகூர் காவல்துறை
பொதுமக்களுக்கு நினைவூட்டுவதாக அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அரச மலேசியா காவல்துறையின் தலைமைப் பதவியில் ஏற்படும்
மாற்றங்கள் தொடர்பான எந்த அதிகாரப்பூர்வ தகவல்களும் படையின் அதிகாரப்பூர்வ
சேனல்கள் மூலம் மட்டுமே அறிவிக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *