ம.இ.காவுக்கு அரசாங்கத்தில் பதவி அளித்தால்? துளசி சாடல்!
- THINAGAREN SANGGAREN
- 27 Jul, 2026
ஜூலை 27,
நெகிரி செம்பிலான் மாநிலச் சட்டமன்றத் தேர்தலில் பாரிசான் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் ம.இ.காவுக்கு 2 அமைச்சர் பதவிகள் வழங்கப்படும் என பாரிசான் தலைவர் Datuk Seri Ahmad Zahid Hamidi கூறினாலும் இப்போது மாநிலத் தேர்தலில் பாரிசானுடன் கைக்கோர்த்திருக்கும் பாஸ் கட்சி இதை ஏற்குமா என புந்தோங் சட்டமன்ற உறுப்பினர் THULSI MANOGARAN கேள்வி எழுப்பினார். Zahid மிகவும் தாமதமாக இந்தியர்களை அங்கீகரிக்கிறார். கடந்த 2004 முதல் 2018 வரையில் பாரிசான் ஆட்சியிலிருந்த நெகிரி செம்பிலானில் ஒரே ஒரு இந்திய ஆட்சிக் குழு உறுப்பினருக்கு மட்டுமே பாரிசான் வாய்ப்பளித்தது. ஆனால் 2018 நெகிரி செம்பிலான் தேர்தலில் பக்காத்தான் தலைமையிலான ஆட்சியில் 2 ஆட்சிக்குழு உறுப்பினர்களாக இந்திய சட்டமன்ற உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டதை THULSI MANOGARAN சுட்டிக்காட்டினார்.
நெகிரி செம்பிலான் மாநில உள்ளாட்சி வீட்டுவசதி போக்குவரத்து ஆகிய துறைகளுக்கு Arul Kumar ஆட்சிக் குழு உறுப்பினராகவும், மனிதவளம் தொழில்முனைவோர், சுற்றுச்சூழல், கூட்டுறவு நுகர்வோ துறைகளுக்கு Veerapan என இரு முக்கிய துறைகளுக்குப் பக்காத்தானின் இந்திய சட்டமன்ற உறுப்பினர்களைப் பக்காத்தான் நியமித்ததை THULSI MANOGARAN சுட்டிக்காட்டினார். பக்காத்தான் தகுதியான இந்தியத் தலைவர்களை அங்கீகரிக்கிறது. Datuk Seri Ahmad Zahid Hamidi மிக மிக தாமதமாக இந்தியர்களைப் பற்றி சிந்திக்கிறார் என புந்தோங் சட்டமன்ற உறுப்பினர் THULSI MANOGARAN சாடினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *

