இந்தியர்களின் சொத்துகளை ம.இ.கா கொள்ளை அடித்ததா?

top-news

அக்தோபர் 4,

180 கோடி ரிங்கிட் சொத்துகளை வைத்திருக்கும் ம.இ.கா, மலேசிய இந்தியர்களின் சொத்துகளைக் கொள்ளை அடித்ததாகச் சொல்லப்படும் கருத்துகளை ம.இ.காவின் தலைவர் TAN SRI VIGNESWARAN மறுத்தார். நாங்கள் மலேசிய இந்தியர்களுக்காகக் குரல் கொடுக்கிறோம். அதுபோல ம.இ.காவின் உறுப்பினர்களும் குரல் கொடுக்க வேண்டும் என ம.இ.காவின் தலைவர் TAN SRI VIGNESWARAN கேட்டுக்கொண்டார். இப்போது எல்லோரும் சொல்வீர்கள். ஆனால் நாங்கள் குரல் கொடுத்த பின்னர் எங்கள் பின்னால் யாருமே இருப்பது இல்லை என இன்று நடைபெற்ற சிலாங்கூர் மாநில அளவிலான ம.இ.கா பேராளர் கூட்டத்தில் ம.இ.காவின் தலைவர் TAN SRI VIGNESWARAN தெரிவித்தார்.

சிலாங்கூரில் இருக்கும் ம.இ.காவினர் தயார் நிலையில் இருக்க வேண்டும். தேர்தலில் மீண்டும் நாம் வெற்றி பெற வேண்டும். சிலாங்கூரில் மீண்டும் பாரிசான் ஆட்சி அமைக்க வேண்டும் என ம.இ.காவின் தலைவர் TAN SRI VIGNESWARAN சிலாங்கூர் மாநில ம.இ.கா பேராளர்களுக்கு வலியுறுத்தினார். ம.இ.காவின் மீது பல அவதூறுகளைப் பரப்புகிறார்கள். 1.8 பில்லியன் சொத்துகளுடன் ம.இ.கா இருக்கிறது. புதிய கட்டிடம் கடன் இல்லாமல் கட்டப்படுகிறது. சிலாங்கூரில் மீண்டும் ஆட்சியை நாம் கைப்பற்ற வேண்டும் என ம.இ.காவின் தலைவர் TAN SRI VIGNESWARAN தெரிவித்தார். 

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *