டிஏபி முடிவை ரபிஸி மதிக்க வேண்டும்: சாவ் கொன் இயோ

top-news
FREE WEBSITE AD

ஜார்ஜ்டவுன், ஆக. 17-

ஒற்றுமை அரசாங்கத்தில் டிஏபியின் நிலைப்பாடு தொடர்பாக அக்கட்சி எடுத்துள்ள முடிவை, பெர்சாமா கட்சியின் நிறுவனர் டத்தோஸ்ரீ ரபிஸி ரம்லி மதிக்க வேண்டும் என்று டிஏபி மத்திய செயற்குழு உறுப்பினர் சாவ் கொன் இயோ வலியுறுத்தியுள்ளார்.

இதற்கு முன்னதாக ரபிஸி வெளியிட்ட கருத்தில், டிஏபி தற்போது அதிகாரத்தை அனுபவித்து வருவதால், ஒற்றுமை அரசாங்கத்திலிருந்து அக்கட்சி வெளியேற வாய்ப்பில்லை என்று கூறியிருந்தார்.

மேலும், மத்திய அரசில் அமைச்சர்கள் மற்றும் துணை அமைச்சர்கள் முதல் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் உள்ளாட்சி மன்ற உறுப்பினர்கள் வரை டிஏபிக்கு கணிசமான பிரதிநிதித்துவம் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், ரபிஸியின் கருத்து குறித்து பதிலளித்த சாவ் கொன் இயோ, டிஏபி மற்றும் அதன் பிரதிநிதிகள் எடுத்துள்ள முடிவை ரபிஸி மதிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *