புதிய பாணியில் அம்னோ! - அக்மால் சலே
- Shan Siva
- 12 Jun, 2024
பெட்டாலிங் ஜெயா, ஜூன் 12: கட்சியை சீர்திருத்துவதற்கும்,
இணக்கமாக இருப்பதற்கும் இளைய தலைமுறை
தலைமைப் பொறுப்புக்கான அழைப்புகளை அம்னோ இளைஞர்கள் வரவேற்றுள்ளதாக அம்னோ இளைஞரணித்
தலைவர் டாக்டர் அக்மல் சலே தெரிவித்துள்ளார்.
பொதுத் தேர்தல் வேட்பாளர்களாக
முன்னிறுத்துவதற்கு முன், மக்களுக்கு
முழு மனதுடன் சேவை செய்யக்கூடிய தலைவர்களை கட்சி அடையாளம் காண வேண்டும் என்று அவர்
வலியுறுத்தினார்.
அம்னோ மற்றும் பிற கட்சிகளில்
உள்ள "போர் பிரபுக்களால்" பொதுமக்கள் சோர்வடைந்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், மக்களுக்காக உழைக்கக்கூடிய இளம் தலைவர்களை முன்வைக்கும்
உத்தியை ஒரு புதிய பாணி அரசியலாக தாம் பார்ப்பதாகத் தெரிவித்துள்ளார்.
தேர்தலின் போது வேட்பாளராக
மாறுவது மட்டுமல்ல, பொதுத்
தேர்தலுக்கு முன்பும், அதற்குப்
பிறகும் மக்களுக்காக உழைக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *