சரவாக்கில் புகைமூட்டம் எச்சரிக்கை அளவைத் தாண்டியது
- Shan Siva
- 08 Aug, 2026
கோலாலம்பூர், ஆக 8: இந்தோனேசியாவின் கலிமந்தானில் ஏற்பட்ட காட்டுத் தீ காரணமாக, சரவாக்கின் பல பகுதிகளைப் பாதிக்கும் புகைமூட்டம் மோசமடைந்துள்ளதுடன், ஐந்து மாவட்டங்களில் காற்றின் தரம் ஆரோக்கியமற்றதாக மாறியுள்ளது.
காலை 8 மணி நிலவரப்படி, செரியான் மாவட்டத்தில் காற்றின் மாசுபடுத்தும் குறியீடு (API) 171 ஆக மிக அதிகமாக இருந்தது என்று சுற்றுச்சூழல் துறை தெரிவித்துள்ளது.
101 முதல் 200 வரையிலான API அளவீடு ஆரோக்கியமற்றது என வகைப்படுத்தப்படுகிறது. இது குறிப்பாக குழந்தைகள், முதியவர்கள் மற்றும் சுவாசக் கோளாறுகள் உள்ளவர்கள் போன்ற பாதிக்கப்படக்கூடிய குழுக்களுக்கு உடல்நல அபாயங்களை ஏற்படுத்தக்கூடும்.
குறிப்பாக சரவாக்கில், ஆரோக்கியமற்ற API அளவுகள் பதிவாகும் பகுதிகள் அதிகரித்துள்ளதால், இன்று காற்றின் தரம் மோசமடைந்துள்ளது என்று அது ஒரு அறிக்கையில் கூறியுள்ளது!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



