ஆப்பிரிக்கா: தங்கச் சுரங்கம் சரிந்த விபத்தில் பலி எண்ணிக்கை 107 ஆக உயர்வு
- Surendran Sumdraraj
- 21 Aug, 2026
பாங்குய்: மத்திய ஆப்பிரிக்க குடியரசில் தங்கச் சுரங்கம் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 107 ஆக உயர்ந்துள்ளது. இந்த கோர சம்பவம் அந்நாட்டின் மேற்கு பகுதியில், கேமரூன் எல்லைக்கு அருகே உள்ள ஜாம்போயே கிராமத்தில் நடந்துள்ளது.
கடந்த 18-ஆம் தேதி பிற்பகல் சுமார் 2 மணியளவில் சுரங்கத்தில் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தபோது திடீரென மண் சரிவு ஏற்பட்டது. இதனால் சுரங்கத்தின் பல்வேறு பகுதிகள் இடிந்து விழுந்தன. இதில் ஏராளமான தொழிலாளர்கள் மண்ணுக்குள் சிக்கினர்.
தகவல் அறிந்து அப்பகுதி மக்கள் மற்றும் மீட்புக்குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இதுவரை 107 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் சிலர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



