நேபாள திடீர் வெள்ளம்: 300-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் மாயம் – வெளியுறவு அமைச்சர் தகவல்

top-news
FREE WEBSITE AD

காத்மாண்டு: நேபாள–திபெத் எல்லைப் பகுதிகளில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி 300-க்கும் மேற்பட்ட இந்திய சுற்றுலாப் பயணிகள் காணாமல் போயுள்ளதாக நேபாள வெளியுறவு அமைச்சர் சிஷிர் கனால் தெரிவித்துள்ளார்.

புதன்கிழமை ஏற்பட்ட இந்த பேரிடர் நேபாளத்தின் மூன்று மாவட்டங்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக ராசுவா பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தில் 160-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், ஏராளமானோர் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார்.

“ஆயிரக்கணக்கான குடும்பங்கள் தங்களது வீடுகளை இழந்துள்ளன. பேரிடரால் ஏற்பட்ட முழுமையான பாதிப்பை இன்னும் மதிப்பிட்டு வருகிறோம்,” என சிஷிர் கனால் தெரிவித்தார்.

போட்டேகோஷி நதிப் பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளமே மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது. பனிப்பாறை மற்றும் பாறைகள் சரிந்து நதியில் விழுந்ததே இந்த பேரழிவுக்குக் காரணமாக இருக்கலாம் என ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

காணாமல் போன இந்தியர்களில் குறைந்தது 50 பேர் கைலாஷ் மானசரோவர் யாத்திரைக்குச் சென்றவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *