பள்ளி மாணவர்களிடம் அணுசக்தி தொழில்நுட்பம் குறித்த விழிப்புணர்வை விரிவுபடுத்த MOSTI திட்டம்

top-news
FREE WEBSITE AD

புத்ராஜெயா, ஆக. 18-

அணுசக்தி தொழில்நுட்பம் குறித்த சரியான புரிதலை சிறு வயதிலேயே உருவாக்கும் நோக்கில், அணுசக்தி விழிப்புணர்வு திட்டத்தை ஆரம்பப் பள்ளி மாணவர்களுக்கும் விரிவுபடுத்த அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சு (MOSTI) திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் டத்தோ சாங் லிஹ் காங் கூறினார்.

அணுசக்தி தொழில்நுட்பம் குறித்து இளம் தலைமுறையினர் உண்மைகள் மற்றும் அறிவியல் அடிப்படையிலான தகவல்களைப் புரிந்துகொள்வதை உறுதி செய்வதற்கு ஆரம்பகால அறிமுகம் முக்கியமானது என அவர் மேலும் சொன்னார்.

அணுசக்தி என்றாலே ஆபத்து, ஆயுதங்கள் அல்லது அழிவு தொடர்பான கருத்துகளே பலரது மனதில் தோன்றுவதாகக் குறிப்பிட்ட அவர், அந்தப் புரிதலை மாற்றுவதற்கு பள்ளி நிலையிலிருந்தே முறையான விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியம் என தெரிவித்தார்.

இதற்காக, ஆரம்பப் பள்ளி மாணவர்களிடையே அணுசக்தி தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கைகளை அறிமுகப்படுத்த கல்வி அமைச்சுடன் MOSTI இணைந்து செயல்படும் என்றும் அவர் கூறினார்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *