லாரியில் மோதி மோட்டார் சைக்கிளோட்டி பலி! லாரி ஓட்டுநர் கைது!

top-news

நவம்பர் 10, 

லாரியின் பின் சக்கரத்தில் சிக்கி மோட்டார் சைக்கிளோட்டி இழுத்துச் செல்லப்படும்படியானக் காணொலி சமூக வலைத்தளங்களில் பரவியதை அடுத்து KUCHING மாவட்டக் காவல் ஆணையர் Merbin Lisa விளக்கமளித்தார். சம்மந்தப்பட்ட காணொலி Kuching மாவட்டத்தில் உள்ள ஒரு சாலையில் ஏற்பட்ட விபத்து என்றும், லாரியின் இடது பக்கமாக முந்த முயன்ற 40 வயது மோட்டார் சைக்கிளோட்டி லாரியின் பின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் விசாரணைக்காக லாரி ஓட்டுநர் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகவும் அவர் விளக்கமளித்தார். மோட்டார் சைக்கிளோட்டி லாரியின் பின் சக்கரத்தில் சிக்கியிருப்பதை அறியாமல் லாரியைச் செலுத்தியதாக லாரி ஓட்டுநர் வாக்குமூலம் அளித்துள்ள நிலையில் இது ஒரு விபத்து எனும் அடிப்படையில் விசாரிக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்,

Kemalangan melibatkan motosikal dan lori di Kuching menyebabkan penunggang motosikal maut di tempat kejadian. Mangsa terjatuh dan diheret lori. Pemandu lori ditahan untuk siasatan lanjut.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *