111 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்! 26 பள்ளி மாணவர்கள் கைது!
- THINAGAREN SANGGAREN
- 22 Nov, 2026
நவம்பர் 22,
சிலாங்கூரின் நெடுஞ்சாலைகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 111 மோட்டார் சைக்கிள்களைப் போக்குவரத்து ஆணையமான JPJ பறிமுதல் செய்துள்ளதாகச் சிலாங்கூர் மாநில JPJ இயக்குநர் Datuk Ahmad Kamarunzaman தெரிவித்தார். சட்டவிரோத மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபடுதல், ஓட்டுநர் உரிமம் இல்லாமல் மோட்டார் சைக்கிள்களைச் செலுத்துதல், மோட்டார் சைக்கிளில் தொழில்நுட்ப மாற்றங்களைச் செய்திருப்பது என பல்வேறு குற்றங்களுக்காக 111 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக Datuk Ahmad Kamarunzaman விளக்கமளித்தார்.
சோதனையின் போது 16 வயதுக்கும் குறைவான பள்ளி மாணவர்களைக் காவல்துறை கைது செய்ததாகவும் அவர்களுடைய மோட்டார் சைக்கிள்களைப் பறிமுதல் செய்திருப்பதாகவும் Datuk Ahmad Kamarunzaman தெரிவித்தார். நள்ளிரவுகளில் மோட்டார் சைக்கிள்களில் உலா வருவதைப் பள்ளி மாணவர்கள் தவிர்க்க வேண்டும் என்றும் நள்ளிரவுகளில் வெளியேறும் மாணவர்களின் பெற்றோர்கள் அதீத கவனத்துடன் இருக்க வேண்டும் என்றும் Datuk Ahmad Kamarunzaman வலியுறுத்தினார். கைது செய்யப்பட்ட 26 பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் காவல் நிலையத்திற்கு வந்து அவர்களுடைய பிள்ளைகளை அழைத்து சென்றதாகவும் அவர்கள் மீது எந்தவொரு குற்றப்பத்திரிக்கையும் தாக்கல் செய்யவில்லை என்றாலும் பறிமுதல் செய்யப்பட்ட அவர்களின் மோட்டார் சைக்கிள்களை மீண்டும் அவர்களிடம் ஒப்படைக்கவில்லை என Datuk Ahmad Kamarunzaman தெரிவித்தார்
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *

