பேங்காக் அஸ்மோ போட்டியில் அம்பாங் தமிழ்ப்பள்ளி மாணவன் முகமட் வெற்றி!

top-news

பேங்காக் அனைத்துலக அஸ்மோ போட்டியில் அம்பாங் தமிழ்ப்பள்ளி மாணவன் முகமட் ரொஹாய்ல் ஹனில் இரண்டாவது இடத்தில் வாகை சூடினார்!



கடந்த ஐந்து நாட்களாக தாய்லாந்து தலைநகர் பேங்காக்கில் நடைபெற்ற (அஸ்மோ- ASMO-2024) எனும் ஆசியஅறிவியல் மற்றும் ஆங்கில ஒலிம்பியாட் (அஸ்மோ) அனைத்துலக போட்டியில் ஆங்கிலத்தேர்வுக்காக மலேசியாவை பிரதிநிதித்து முதன் முறையாக சிலாங்கூர் அம்பாங் தமிழ்ப்பள்ளியைச்சேர்ந்த 6ஆம் வகுப்பு மாணவன் முகமட் ரொஹாய்ல்ஹனிப் பின் முகமட் ரைசல் இரண்டாவது இடத்தில் வெற்றி வாகை சூடினார்.

இவரின் இந்த வெற்றி நாட்டிற்கும் அம்பாங் தமிழ்ப்பள்ளிக்கும் ஆசிரியர்களுக்கும் பெருமையளிப்பதாக இவரின் தந்தை முகமட் ரைசல் மகிழ்ச்சியோடு கூறினார்.

தமிழ்ப்பள்ளியில் படித்த மாணவன் வானத்தை நோக்கி சாதனை படைக்க முடியும் என்ற நம்பிக்கை தமக்கு இருந்து,அது மாபெரும்வெற்றிக்கு மாலை சூடியுள்ளதாக தந்தை முகமட் ரைசல் கூறினார்.

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *