புரூணைக்கு அரசுமுறை பயணத்தை மேற்கொள்ளவிருக்கும் பேரரசர் சுல்தான் இப்ராஹிம்!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், அக். 12-

மாட்சிமை தங்கிய மலேசியப் பேரரசர் சுல்தான் இப்ராஹிம் நாளை ஞாயிற்றுக்கிழமை 13ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை புரூணைக்கு அரசுமுறை பயணத்தை மேற்கொள்ளவிருக்கிறார். இவ்விரு நாடுகளின் அரசுத் தொடர்புகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கத்தில் அவர் இப்பயணத்தை மேற்கொள்கிறார்.

பேரரசரோடு மலேசியப் பேரரசி ராஜா ஸாரித் சோஃபியாவும் உடன் செல்வார் என்று இஸ்தானா நெகாரா நேற்று வெளியிட்ட அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பேரரசர் தம்பதியருடன் ஜொகூர் தெங்கு தெமங்கோங், துங்கு இட்ரிஸ் இஸ்கண்டார் சுல்தான் இப்ராஹிமும் உடன் செல்வார்.

கடந்த ஜூலை மாதம் மலேசியாவின் பதினேழாவது பேரரசராக சுல்தான் இப்ராஹிம் பதவியேற்ற சடங்கில் புரூணை சுல்தான் ஹசானால் போல்கியா தமது துணைவியாருடன் கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.



ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *