நடிகர் தனுஷ் டி 55 படம் குறித்த முக்கிய தகவல்!

top-news
FREE WEBSITE AD

கடந்த ஆண்டு நடிகர் தனுஷ் நடித்த இயக்கிய இட்லி கடை படம் வெளியானது. இதை தொடர்ந்து நடிகர் தனுஷ் போர்த்தொழில் பட இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் கர என்ற படத்தில் நடித்திருக்கிறார். இந்த படம் வருகிற மார்ச் 19ம் தேதி ரிலீஸ் என்று தகவல் வெளியாகி உள்ளது. அடுத்து ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனது 55வது படத்தில் தனுஷ் நடிக்கிறார்.

இந்த படத்தில் பராசக்தி படத்தில் நடித்த நடிகை ஸ்ரீலீலா நாயகி என சில தினங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியானது. இதையடுத்து தற்போது நடிகை சாய்பல்லவியும் இந்த படத்தில் இன்னொரு நாயகியாக நடிக்கும் தகவலையும் படக்குழு தரப்பில் உறுதி செய்துள்ளது. ஏற்கனவே ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த அமரன் படத்தில் சாய்பல்லவி கதாநாயகியாக நடித்திருந்தார்.

இந்நிலையில் டி55 படம் 90 சதவீதம் சென்னையில் மட்டுமே படமாக்கப்பட உள்ளது. முழுக்க முழுக்க இந்த படத்தின் கதைக்களம் சென்னையாக உள்ளது. மீதி 10 சதவீதம்தான் வெளியிடங்களில் படமாக்கப்பட உள்ளது. மேலும் இந்த படத்தின் முழுமையான ஸ்கிரிப்டை படித்து பார்த்த நடிகர் தனுஷ், இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி பாராட்டிய தகவலும் வெளியாகி உள்ளது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *