மாட்டுப் பொங்கல் தினமான இன்று வாடிவாசல் படத்தின் முக்கிய தகவல்!

top-news

வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிக்கும் வாடிவாசல் படப்பிடிப்பு எப்போது என்று சூர்யா ரசிகர்கள் வெகு ஆர்வமாக எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். விடுதலை விடுதலை 2 படங்களுக்கு பிறகு வாடிவாசல் படப்பிடிப்பை துவங்க இயக்குனர் வெற்றிமாறனும் தயாராகி வருவதாக கூறப்பட்டது.

தை மாதம் பிறந்த 2ம் நாளான மாட்டுப் பொங்கல் தினமான இன்று வாடிவாசல் படம் குறித்த லேட்டஸ்ட் அப்டேட் வந்துவிட்டது. படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு, தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் சூர்யா, வெற்றிமாறனுடன் இருக்கும் தனது புகைப்படத்தை வெளியிட்டு பதிவு செய்துள்ளார்.

அந்த பதிவில், அவர்களது புகைப்படத்துக்கு கீழே 'அகிலம் ஆராதிக்க வாடிவாசல் திறக்கிறது' என்று எஸ் தாணு அதில் குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து வாடிவாசல் படப்பிடிப்பு விரைவில் துவங்குவதற்கான அறிகுறி வந்துவிட்டது. இந்த படத்தில் இயக்குனர் அமீரும் முக்கியமான கேரக்டரில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *