நெல், அரிசியை உட்படுத்திய முறையற்ற வணிகக் கூட்டமைப்பு நடவடிக்கை-டத்தோ ஃபுசியா சாலே!
- Muthu Kumar
- 07 Nov, 2024
கோலாலம்பூர், நவ. 7-
நெல், அரிசியை உட்படுத்திய முறையற்ற வணிகக் கூட்டமைப்பு நடவடிக்கை குறித்த ஆய்வறிக்கையை மலேசிய போட்டி ஆணையம் தயார் செய்துள்ளது.விதைகள், அதன் இறக்குமதியின் விநியோகத்தைக் கட்டுப்படுத்தும் எந்தவொரு நிறுவனத்தின் ஆதிக்க நிலையையும் துஷ்பிரயோகம் செய்வதற்கான சாத்தியக்கூறுகளை இந்த ஆய்வு உள்ளடக்கி இருப்பதாக, உள்நாட்டு வாணிபம், வாழ்க்கைச் செலவின துணை அமைச்சர் டத்தோ ஃபுசியா சாலே தெரிவித்தார்.
அரிசி, விவசாயிகள் குறித்து, நெல் மற்றும் அரிசி விற்பனை தொழில்துறையில் முறையற்ற வணிகக் கூட்டமைப்பு தொடர்புடைய ஆய்வறிக்கையை மலேசிய போட்டி ஆணையம் தயார் செய்துள்ளதை, நான் உங்களுக்குத் தெரிவித்து கொள்கிறேன். ஆனால், அதிகாரப்பூர்வ அறிக்கை வெளிவரும் வரை இது குறித்து மேலும் தெரிவிக்க முடியாது. ஆனால், நெல் மற்றும் அரிசி விற்பனையில் முறையற்ற வணிகக் கூட்டமைப்பு தொடர்பாக முன்னதாகவே நிறைவடைந்து விட்டது”, என்று அவர் கூறினார்.
இதனிடையே, ஒரு விநியோகச் சங்கிலியில் எந்தவொரு முறையற்ற வணிகக் கூட்டமைப்பு நடவடிக்கையும் ஆதிக்கமும் இருந்தால் அதனை விசாரித்து நடவடிக்கை எடுப்பதில் மலேசிய போட்டி ஆணையம் பங்கு வகிப்பதாக, அவர் மேலும் விவரித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *