மருத்துவமனைக்குள் நுழைந்த கார்! – மூவாரில் பரபரப்பு!

top-news
FREE WEBSITE AD

மூவாரில் உள்ள Hospital Pakar Sultanah Fatimah மருத்துவமனையில் கார் நிறுத்துமிடத்திலிருந்து வெளியேறிய வாகனம் திடீரென மருத்துவமனையிந் முகப்பை மோதி மருத்துவமனைக்குள் நுழைந்ததில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

வெள்ளிக் கிழமை இரவு 10.20 மணியளவில் சிகிச்சை பெற்ற நோயாளி ஒருவர் வீட்டுக்குத் திரும்பும் போது திடிரென வலிப்பு வந்ததால் காரின் கட்டுப்பாட்டை இழந்து மருத்துவமனைக்குள் விபத்துக்குள்ளானதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்ததாக MUAR மாவட்டக் காவல் ஆணையர் Raiz Mukhliz Azman Aziz தெரிவித்தார்.

இவ்விபத்தில் கார் ஓட்டுநரான 30 வயது ஆடவருக்குக் காயம் ஏற்பட்டதாகவும் அவருடன் இருந்த 28 வயது மற்றோர் ஆடவர் சிராய்ப்பு காயங்களுடன் தப்பியதாகவும் இருவருக்கும் தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் MUAR மாவட்டக் காவல் ஆணையர் Raiz Mukhliz Azman Aziz தெரிவித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *