நான் ஊழல்வாதியா? அப்படியெனில் நஜீப் யார்? - Tan Sri Muhyiddin Yassin
- Thina S
- 08 Sep, 2024
தான் ஊழல் செய்ததாகவும் பணமோசடி செய்ததாகவும் கருத்து தெரிவிக்கும் பலரும் நஜீப்பின் மீதான ஊழல் வழக்கையும் பணமோசடி வழக்கையும் பற்றி பேசாமல் இருப்பது ஆச்சரியமாக இருப்பதாகப் பெரிக்காத்தான் தலைவர் Tan Sri Muhyiddin Yassin தெரிவித்துள்ளார். 1 BESTARI NET திட்டத்தின் மூலமாக RM 4 BILLION ரிங்கிட் நட்டம் ஏற்பட்டதற்கு அப்போதைய பிரதமரும் நிதி அமைச்சருமான Datuk Seri Najib Razak காரணம் என Muhyiddin தெரிவித்தார்.
கடந்த 2011 ஆம் ஆண்டு தொடங்கிய 1 BESTARI NET திட்டத்தின் போது தாம் கல்வி அமைச்சராக இருந்ததாகவும் YTL Communications Sdn Bhd நிறுவனம் முழுமையாக 1 BESTARI NET திட்டத்தை வழிநடத்தியதாகவும் அத்திட்டம் முழுமையாக நிதி அமைச்சின் கீழ் இயங்கியதாக அவர் தெரிவித்தார்.
அதன் பின்னர் 2019 ஆம் ஆண்டு அப்போதைய கல்வி அமைச்சராக இருந்த Maszlee Malik, YTL Communications நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை ரத்து செய்தார். 2020 இல் நான் பிரதமராக இருந்த போது 1 BESTARI NET திட்டமும் இல்லை, YTL Communications நிறுவனமும் இல்லை. 4 BILLION ரிங்கிட் பணம் எங்கே எனும் கேள்வியை நானும் கேட்கிறேன் என பெரிக்காத்தான் தலைவர் Tan Sri Muhyiddin Yassin கேள்வி எழுப்பினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *