முனீஸ்காந்தின் ‘தி டோர்ம்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

top-news
FREE WEBSITE AD

சென்னை: நடிகர் முனீஸ்காந்த் கதாநாயகனாக நடித்துள்ள ‘தி டோர்ம்’ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. அறிமுக இயக்குநர் தீபா ஸ்ரீதர் இயக்கியுள்ள இந்தப் படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்துள்ளன.

‘சூது கவ்வும்’, ‘முண்டாசுப்பட்டி’, ‘ஜிகர்தண்டா’, ‘மாநகரம்’, ‘டிடி ரிட்டர்ன்ஸ்’ உள்ளிட்ட பல படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்த முனீஸ்காந்த், இப்படத்தில் கதையின் நாயகனாக நடித்துள்ளார்.

இப்படத்தில் சபரீஷ், அருண் கார்த்தி, சாம் ஜான், நிகில் நாயர், ஷாலினி காசித்தங்கம், வசுந்தரா ஸ்ரீநாத், சிந்து, பெரோஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இளையராஜா முருகேசன் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ஷாம் விஷால் மற்றும் செபாஸ்டியன் ரொஸாரியோ ஆகியோர் இணைந்து இசையமைத்துள்ளனர். குட் ஸ்டஃப் புரொடக்சன்ஸ் சார்பில் ஈ.ஆர். டில்லி பலராமன் மற்றும் ஜெகதீஸ்வரன் டில்லி ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *