செல்சியின் 3-4-3 யுக்தியைப் பயன்படுத்தி சமநிலை பெற்ற ஜேடிடி: பயிற்சியாளர் சிஸ்கோ முனோஸ்
- Surendran Sumdraraj
- 10 Aug, 2026
ஜொகூர் பாரு, ஆக. 10-
செல்சி அணி பயன்படுத்திய 3-4-3 ஆட்ட அமைப்பில் காணப்பட்ட பலவீனங்களைத் தங்களது அணி திறம்பட பயன்படுத்தியதாக ஜொகூர் டாருல் தக்சிம் (ஜேடிதி) அணியின் தலைமைப் பயிற்சியாளர் சிஸ்கோ முனோஸ் தெரிவித்துள்ளார்.
இஸ்கண்டர் புத்ரியில் உள்ள சுல்தான் இப்ராஹிம் விளையாட்டரங்கில் நேற்று இரவு நடைபெற்ற சர்வதேச நட்பு ஆட்டத்தில் ஜேடிதி அணி செல்சியுடன் 3-3 என்ற கோல் கணக்கில் சமநிலை கண்டது.
ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த சிஸ்கோ முனோஸ், செல்சி அணியின் பயிற்சியாளர் சாபி அலோன்சோ பயன்படுத்தும் தந்திரோபாயங்களை முன்கூட்டியே ஆய்வு செய்ததாகக் கூறினார்.
செல்சி சில நேரங்களில் நான்கு தற்காப்பு வீரர்களுடனும், சில நேரங்களில் மூன்று தற்காப்பு வீரர்களுடனும் களமிறங்கும் என்பதை கருத்தில் கொண்டு, அதற்கேற்ப இரண்டு விதமான திட்டங்களைத் தயாரித்ததாக அவர் தெரிவித்தார்.
“செல்சியை எதிர்கொள்ள நேற்று இரவு எங்களிடம் இரண்டு திட்டங்கள் இருந்தன. அவர்கள் நான்கு அல்லது மூன்று தற்காப்பு வீரர்களைக் கொண்டு விளையாடலாம் என்பதால், போட்டி முழுவதும் சூழ்நிலைக்கு ஏற்ப சில மாற்றங்களைச் செய்ய நாங்கள் தயாராக இருந்தோம்,” என முனோஸ் கூறினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



