துபாயில் அக்டோபர் 25-இல் சூர்யாவின் ‘சீன்’ பட இசை வெளியீட்டு விழா!
- Surendran Sumdraraj
- 22 Oct, 2026
சென்னை: நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘சீன்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா, துபாயில் வரும் 25-ஆம் தேதி பிரமாண்டமாக நடைபெற உள்ளது.
மலையாளத்தில் ‘ரோமாஞ்சம்’, ‘ஆவேசம்’ ஆகிய படங்களை இயக்கிய ஜித்து மாதவன், இப்படத்தை இயக்கியுள்ளார். சூர்யாவுடன் நஸ்ரியா நசீம், நஸ்லென், லால், ஆனந்தராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தில் சூர்யா காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார்.
சூர்யா மற்றும் ஜோதிகாவின் தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டெயின்மென்ட், ழகரம் ஸ்டூடியோஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ளன. படத்துக்கு சுஷின் ஷ்யாம் இசையமைத்துள்ளார்.
ஏற்கெனவே இப்படத்திலிருந்து ‘ஆத்தி யார்ரா இவ’, ‘ஏரோபிளேன்’ ஆகிய இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளன.
இந்நிலையில், ‘சீன் லைவ் இன் துபாய்’ என்ற பெயரில் நடைபெறவுள்ள இசை வெளியீட்டு விழா, துபாயில் உள்ள சிலிக்கான் சென்ட்ரல் வணிக வளாகத்தில் வரும் 25-ஆம் தேதி மாலை 6 மணிக்குத் தொடங்கும் என்று படக்குழு அறிவித்துள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *

