போராட்டம் நடத்தும் மாணவர்களைச் சந்திக்க வேண்டும்: ஜார்கண்ட் முதல்வருக்கு ராகுல் காந்தி கடிதம்
- Surendran Sumdraraj
- 18 Aug, 2026
புதுடெல்லி: ஜார்கண்ட் மாநிலத்தில் தேர்வு முறைகேடுகளைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களை நேரில் சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிய வேண்டும் என, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மாநில முதலமைச்சர் ஹேமந்த் சோரனுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
ஜார்கண்ட் மாநில அளவிலான ஆட்சேர்ப்புத் தேர்வுகளில் முறைகேடுகள் நடைபெற்றதாகக் கூறி மாணவர்கள் அமைதியான முறையில் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களின் கோரிக்கைகள் நியாயமானவை என்றும் ராகுல் காந்தி தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக மாநில அரசு அமைத்துள்ள குழு மூலம் பேச்சுவார்த்தை தொடங்கியிருப்பதை வரவேற்றுள்ள அவர், மாணவர்கள் முன்வைத்த பல்வேறு கோரிக்கைகளில் உடன்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், மாணவர்களின் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருவதுடன், சிலர் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



