“முத்துவேல் பாண்டியனின் வேட்டை தொடரும்” – சிறப்பு வீடியோ வெளியிட்ட ‘ஜெயிலர்’ படக்குழு

top-news
FREE WEBSITE AD

சென்னை, ஆக. 11-

ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற ‘ஜெயிலர்’ திரைப்படம் வெளியாகி 3 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் சிறப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் கடந்த 2023ஆம் ஆண்டு வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் ரஜினிகாந்துடன் ரம்யா கிருஷ்ணன், விநாயகன், மிர்ணா, வசந்த் ரவி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். அனிருத் இசையமைத்திருந்த இப்படம் ஆக்‌ஷன் மற்றும் நகைச்சுவை கலந்த கதைக்களத்துடன் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது.

படம் உலகளவில் சுமார் ரூ.600 கோடி வரை வசூல் செய்ததாக கூறப்படுகிறது. இதன் வெற்றியைத் தொடர்ந்து தற்போது ‘ஜெயிலர் 2’ திரைப்படம் உருவாகி வருகிறது.

மீண்டும் ரஜினிகாந்த் மற்றும் நெல்சன் திலீப்குமார் கூட்டணி இணைந்துள்ளதால், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. முதல் பாகத்தைப் போலவே ‘ஜெயிலர் 2’ படத்திலும் மோகன்லால், சிவராஜ்குமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ‘ஜெயிலர்’ வெளியாகி 3 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு வெளியிடப்பட்ட சிறப்பு வீடியோவில், “முத்துவேல் பாண்டியனின் வேட்டை தொடரும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், ‘ஜெயிலர் 2’ திரைப்படம் வரும் அக்டோபர் 15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. சிறப்பு வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *