மியன்மார் ராணுவம் ஜோ லோவை பாதுகாக்கும்! – நஜீப்பின் வழக்கறிஞர்!

top-news

நவம்பர் 20,

1MDB ஊழல் வழக்கில் தேடப்படும் குற்றவாளியான Jho Low மியன்மார் நாட்டில் ராணுவப் பாதுகாப்புடன் இருக்க வாய்ப்புள்ளதாக நஜீப்பின் வழக்கறிஞர் Muhammad Shafee Abdullah தெரிவித்துள்ளார்.
1MDB வழக்கின் விசாரணை நீதிமன்றத்தில் நடந்து வருவதால் JHO LOW தலைமறைவுக் குறித்து அவரின் உதவியாளரும் அரசு தரப்பு சாடியுமான Jasmine Loo ஒரு சில உண்மைகளை மறைப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

வழக்கின் குறுக்கு விசாரணையின் போது Jasmine Loo நான் கேட்ட கேள்விகளுக்குத் தடுமாற்றத்துடன் பதில் சொன்னதன் அடிப்படையில் மியன்மார் நாட்டில் ஜோ லோவ் இருப்பதற்கு அதிகமான வாய்ப்புகள் உள்ளதாக Muhammad Shafee Abdullah தெரிவித்தார்.
கடந்த 2011 வரையில் மியன்மாரில் ராணுவ ஆட்சி நடமுறையில் இருந்த போது ஜோ லோவ் அதிகமான முறை மியான்மாருக்குச் சென்றுள்ளதாகவும் கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் மியான்மாரில் மிண்டும் ராணுவ ஆட்சி நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதால் ஜோலோவ் மியன்மாரில் இருக்க அதிகமாக வாய்ப்புள்ளதாக நஜீப்பின் வழக்கறிஞர் Muhammad Shafee Abdullah தெரிவித்துள்ளார்.

Junta tentera Myanmar mungkin melindungi ahli perniagaan yang sedang diburu Low Taek Jho, menurut peguam Najib Razak, Muhammad Shafee Abdullah.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *