ஆங் சான் சூகியை விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரித்த மியான்மர்
- Surendran Sumdraraj
- 11 Aug, 2026
நைபிடா, ஆக. 11-
மியான்மரில் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் தலைவர் ஆங் சான் சூகியை நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டும் என்ற ஆசியான் கூட்டமைப்பின் கோரிக்கையை அந்நாட்டு ராணுவ அரசு நிராகரித்துள்ளது.
2021ஆம் ஆண்டு ராணுவப் புரட்சி மூலம் மக்களாட்சி அரசை கவிழ்த்ததைத் தொடர்ந்து, ஆங் சான் சூகி கைது செய்யப்பட்டார். அதன்பின்னர் அவர் தொடர்பான விவகாரத்தில் சர்வதேச நாடுகள் தொடர்ந்து மியான்மர் அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றன.
இதற்கிடையே, சமீபத்தில் செஞ்சிலுவைச் சங்கத்தின் பிரதிநிதி ஆங் சான் சூகியை சந்தித்ததாகத் தெரிவிக்கப்பட்டது. இந்தச் சந்திப்பை வரவேற்ற ஆசியான் கூட்டமைப்பு, சூகியை எந்தவித நிபந்தனையும் இன்றி முழுமையாக விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தியது.
ஆனால், இந்தக் கோரிக்கையை மியான்மர் ராணுவ அரசு நிராகரித்துள்ளது. சட்ட நடைமுறைகளுக்கு உட்பட்டே விடுதலை தொடர்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அரசு தெரிவித்துள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



