தனது நாட்டவர்களை திரும்பப் பெற செலவையும் ஏற்கிறது மியான்மார்: அன்வார்

top-news

புத்ராஜெயா, அக். 8: மலேசியாவில் உள்ள தனது நாட்டவர்களை பெருமளவில் மீண்டும் ஏற்றுக்கொள்ள மியான்மார் அரசு தயாராக இருப்பதாக பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

தற்போது மலேசிய குடிநுழைவுத் துறை தடுப்பு முகாம்களில் உள்ள சுமார் 3,000 முதல் 4,000 மியான்மர் நாட்டவர்கள் உட்பட, அவர்களைத் திருப்பி அனுப்புவதற்கான செலவையும் மியான்மர் தரப்பே ஏற்கத் தயாராக இருப்பதாக அவர் கூறினார்.

இதுவரை மொத்தம் 10,493 மியான்மர் நாட்டவர்கள் விமானங்கள் மற்றும் கடற்படை கப்பல்கள் மூலம் அவர்களது நாட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக அன்வார் தெரிவித்தார்.

இந்த திருப்பி அனுப்பும் நடவடிக்கைகளில் ஒத்துழைத்த மலேசிய கடற்படைக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.

மேலும், மலேசியாவில் இன்னும் தங்கியுள்ள மியான்மார் நாட்டவர்களையும் ஏற்றுக்கொள்ள தங்களது அரசு தயாராக இருப்பதாக மியான்மர் தெரிவித்துள்ளது. எனினும், சம்பந்தப்பட்டவர்களின் பதிவுகள், அடையாள விவரங்கள் மற்றும் நிர்ணயிக்கப்பட்ட விதிமுறைகள், நடைமுறைகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மலேசியாவில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களை அவர்களது சொந்த நாடுகளுக்கு திருப்பி அனுப்பும் நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், மியான்மரின் இந்த ஒத்துழைப்பு திருப்பி அனுப்பும் செயல்முறையை எளிதாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *