இருவர் உயிரிழந்த விபத்து: கார் ஓட்டுநர் போதைப்பொருள் பயன்படுத்தியிருப்பது உறுதி

top-news

ஈப்போ, ஜூலை 27-

தெலுக் இந்தானில் உள்ள ஜாலான் பாடாங் தெம்பாக் பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற சாலை விபத்தில் இரண்டு இளம் பெண்கள் உயிரிழந்த சம்பவத்தில், விபத்துக்கு காரணமானதாகச் சந்தேகிக்கப்படும் கார் ஓட்டுநரின் சிறுநீர் பரிசோதனையில் பென்சோடியாசெபைன் (Benzodiazepine) வகை போதைப்பொருள் பயன்படுத்தியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஹிலிர் பேராக் மாவட்ட காவல்துறை உதவி ஆணையர் சுவா கோக் லியான் தெரிவித்தார்.

 28 வயதுடைய சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட ஆரம்பகட்ட சிறுநீர் பரிசோதனையில் அவர் அந்த வகை போதைப்பொருளுக்குச் சாதகமான முடிவை வழங்கியதாகத் தெரிவித்தார்.

சம்பவம் நிகழ்ந்தபோது சந்தேகநபர் போதைப்பொருளின் தாக்கத்தில் வாகனம் ஓட்டியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அவர் தற்போது காவலில் வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

இந்த விபத்து தொடர்பான விசாரணை 1987ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டம் பிரிவு 44(1)(a) மற்றும் 44(1A)(a) ஆகியவற்றின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதேவேளையில், போதைப்பொருள் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பாக 1952ஆம் ஆண்டு ஆபத்தான போதைப்பொருள் சட்டம் பிரிவு 12(2)-இன் கீழும் தனி விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அவர் கூறினார்.


https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *