வீட்டுக் காவலுக்கான நிபந்தனை: நஜிப் இன்னும் RM50 மில்லியன் அபராதம் செலுத்தவில்லை
- Surendran Sumdraraj
- 21 Sep, 2026
கோத்தா பாரு, செப். 21-
மீதமுள்ள சிறைத்தண்டனையை நிபந்தனைகளுடன் வீட்டுக் காவலில் அனுபவிக்க அனுமதி பெற்றுள்ள முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் ரசாக், விதிக்கப்பட்ட RM50 மில்லியன் அபராதத்தை இதுவரை செலுத்தவில்லை என சட்டத்துறை தலைவர் டான் ஸ்ரீ முகமது துசுகி மொக்தார் தெரிவித்துள்ளார்.
நஜிப்பின் குடும்பத்தினர் இதுவரை அபராதத் தொகையைச் செலுத்தவில்லை என்றும், அந்த தொகை கோலாலம்பூர் உயர் நீதிமன்ற பதிவாளர் அலுவலகத்தில் செலுத்தப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.
நஜிப் தொடர்பான வழக்கு கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் தொடங்கி விசாரிக்கப்பட்டதால், அபராதத் தொகையை அங்குள்ள பதிவாளர் அலுவலகத்திலேயே முழுமையாக செலுத்த வேண்டும் என முகமது துசுகி விளக்கினார்.
நஜிப் தனது மீதமுள்ள சிறைத்தண்டனையை 2028 ஆகஸ்ட் 23 வரை வீட்டுக் காவலில் அனுபவிக்க கூட்டரசுப் பிரதேச மன்னிப்பு வாரியம் நிபந்தனையுடன் அனுமதி வழங்கியுள்ளது. எனினும், வீட்டுக் காவல் நடைமுறைக்கு வருவதற்கு முன்பு RM50 மில்லியன் அபராதம் செலுத்தப்பட வேண்டும் என சட்டத்துறை தலைவர் தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *

