நஜீப்பின் வழக்கை ஒத்திவைக்கும் நீதிமன்றம்!

top-news

செப்டம்பர் 25,

முன்னாள் பிரதமர் Datuk Seri Najib Tun Razak தன் மீது சுமத்தப்பட்டுள்ள 1Malaysia Development Bhd தொடர்பான வழக்கின் தீர்ப்பை நிறுத்தி வைக்கும்படி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை அடுத்த மாதம் அக்டோபர் 14 விசாரிப்பதாக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 1MDB-யின் 230 கோடி ரிங்கிட் தொடர்பான வழக்கில் முன்னாள் பிரதமர் நஜீப் 21 பணமோசடி வழக்கிலும், அதிகாரத்தைப் பயன்படுத்தி விதிகளை மீறியதாக 4 வழக்கிலும் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்து, அவருக்கு 15 ஆண்டுகள் கடுங்காவல் சிறையுடன் 1,138 கோடி ரிங்கிட் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது. 

இந்த தீர்ப்பைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்கும்படியும் SRC International ஊழல் வழக்கின் தீர்ப்பில் வழங்கப்பட்டுள்ள தண்டனையை அனுபவித்த பின்னர் 1MDB வழக்கிற்கான தீர்ப்பை அமல்படுத்த வேண்டும் என நஜீப்பின் வழக்கறிஞர் குழு மனு தாக்கல் செய்துள்ளனர். தற்போது மாமன்னர் வழங்கியிருக்கும் நிபந்தனைகளுடனான பொதுமன்னிப்பை அமல்படுத்த அரசாங்கம் எடுத்துக்கொள்ளும் கால தாமதத்தைக் கருத்தில் கொண்டு, நஜீப்பின் இந்த 1 MDB வழக்கின் தீர்ப்பையும் தள்ளி வைக்க வேண்டும் என நஜீப்பின் வழக்கறிஞர் குழு உயர்நீதிமன்றத்தில் அளித்துள்ள மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *